மிருகசீரிடம்- 1, 2: எதை செய்தாலும் நேர்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் பணவரவு இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள் ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரவு இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணியாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். பெண்களுக்கு பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்கள் நன் மதிப்பை பெறுவதுடன் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களையும் போக்கிக் கொள்வீர்கள். புத்தகங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. பரிகாரம்: முருகனை வணங்க நிம்மதி உண்டாகும். சந்திராஷ்டமம்: அக். 3, 4 அதிர்ஷ்ட நாள்: செப். 27
திருவாதிரை: எதிலும் வேகம் காட்டும் உங்களுக்கு இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரவு அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்னைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பணஉதவியும் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேலதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு மனமகிழ்ச்சியை தரும். அரசியல்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். சக மாணவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பரிகாரம்: சித்தர்களை வழிபட கஷ்டம் நீங்கும். சந்திராஷ்டமம்: அக். 4, 5 அதிர்ஷ்ட நாள்: செப். 28
புனர்பூசம் - 1, 2, 3: எதிலும் ஆலோசனையையும் கேட்கும் உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரவு திருப்தியாக இருக்கும். செலவும் கூடும். பணியாளர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தினர்களின் செயல்கள் உங்கள் கோபத்தை துாண்டலாம். மிகவும் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்குள் திடீர் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். அரசியல்துறையினருக்கு கடன் பிரச்னை குறையும். நண்பர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். பரிகாரம்: நவக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்ய நன்மை உண்டாகும். சந்திராஷ்டமம்: அக். 5, 6 அதிர்ஷ்ட நாள்: செப். 29
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »