நடைபயணம் செல்லும் சிவனடியார்களுக்கு செஞ்சியில் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2022 05:09
செஞ்சி: திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நடைபயணம் செல்லும் சிவனடியார்களுக்கு செஞ்சியில் இந்து அமைப்புகள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
திண்டிவனம் மரகதாம்பிகை திந்திரிணீஸ்வரர் கோவில் சிவனடியார் கூட்டத்தினர் ஒவ்வொரு ஆண்டும் திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டு பாதயாத்திரை குழு சிவனடியார்கள் கடந்த 5ம் தேதி மாலை அணிந்து விரதம் துவக்கினர். நேற்று காலை சிவனடியார்கள் தட்சணாமூர்த்தி, துரை, பாலாஜி உள்ளிட்ட 300 பேர் நேற்று காலை திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நடைபயணம் துவங்கினர். இன்று மதியம் 1 மணிக்கு செஞ்சிக்கு வருகை தந்த இக்குழுவினரை இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பா.ஜ., நகர தலைவர் ராமு, இந்து முன்னணி மாவட்ட மாவட்ட அமைப்பாளர் விஷ்ணுராஜன் ஆகியோர் வரவேற்றனர். சிவனடியார்களுக்கு மதிய உணவு வழங்கி திருவண்ணாமலைக்கு வழி அனுப்பினர். இதில் செஞ்சி நகர இந்து அமைப்பு பிரதிநிதிகள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.