பொதட்டூர்பேட்டையில் ஜாத்திரை நிறைவு : பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2022 09:09
பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டையில், ஒரு வாரமாக நடந்து வந்த ஜாத்திரையில், வேப்பிலை ஆடையுடன் தீச்சட்டி ஏந்தி, அம்மனுக்கு கும்பம் படைத்தனர்.
பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.கடந்த 10ம் தேதி ஆரட்டம்மன் எல்லை பொங்கலுடன் துவங்கிய ஜாத்திரையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அம்மன் ஊர்வலத்துடன் நிறைவு பெற்றது. இதே போல், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, வங்கனுார், சொரக்காய்பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலும் நேற்று முன்தினம் இரவு அம்மன் ஊர்வலம் நடந்தது குறிப்பிடத்தக்கது.