பதிவு செய்த நாள்
18
செப்
2022
09:09
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என் ரோடு, அண்ணா நகர் தியாகி குமரன் காலணியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், சுடலை மகாராஜா, திருக்கோவில் 16 ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 14 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, 15 ம் தேதி படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், பொட்டுசாமிக்கு பொங்கல் வைத்தல், பக்தர்கள் முளைப்பாரி கொண்டு வருதல், திருக்கம்பம் நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 16 ம் தேதி தீர்த்த குடம் எடுத்து வருதல், உச்சி கால பூஜை, கணியான் அழைப்பு, ஸ்ரீ சுடலை மகாராஜா, ஸ்ரீ சத்ராதி, முண்டக சுவாமி, ஸ்ரீ ராஜகாளியம்மன், முத்தாரம்மன் மற்றும் பேச்சியம்மனுக்கு படையல் பூஜை, அலங்கார பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 17 ந் தேதி நேற்று பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து, பொங்கல் வைத்து சாமியை தர்சித்தனர். தொடர்ந்து, வில்லுப்பாட்டு, கம்பம் கங்கையில் சேர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று 18 ந் தேதி காலை 11 மணிக்கு அம்மன் தெரு வீதி உலா வருதல், அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.