பதிவு செய்த நாள்
18
செப்
2022
09:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் குப்பைகளை அகற்றும் பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார்.
தூய்மை இந்தியா, கடலோர தூய்மை விழிப்புணர்வு யொட்டி நேற்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி கடற்கரையில் கழிவு துணிகள், கடல் பாசிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி தலைவர் நாசர்கான், துணை தலைவர் தட்சிணாமூர்த்தி பிச்சை, கவுன்சிலர்கள் ராஜேஸ்வரிசண்முகம், முகேஷ்குமார், இந்திய கடற்படை வீரர்கள், ராமேஸ்வரம் அரசு பள்ளி என்.சி.சி., மாணவர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், உளவார பணியில் ஈடுபட்டனர்.
5 நிமிடம் மட்டும் : முந்தைய கலெக்டர்கள் அக்னி தீர்த்த கரையில் சுத்தம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டனர். ஆனால் தற்போதைய கலெக்டர் 5 நிமிடம் மட்டும் குப்பைகளை சேகரிப்பதை துவக்கி வைத்து, கிளம்பினார். இவருடன் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளும் சென்றனர். பின் கடற்படை வீரர்கள், மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.