பதிவு செய்த நாள்
19
செப்
2022
05:09
நாமக்கல்: புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தை, ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். நாமக்கல்லில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சிலைக்கு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடக்கும். இதன்படி புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடைமாலை சாற்றப்பட்டது. பின், நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.