திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 07:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் இன்று (செப்.24) புரட்டாசி முதல் சனி உற்ஸவம் துவங்கியது .அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விஸ்வரூப பூஜைகள் நடைபெறும். பின்னர் ராஜஅலங்காரம் செய்யப்பட்டு, அதிகாலை 3:00 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அடிப்படை வசதிகள் குறித்து சிவகாசி சப் கலெக்டர் பிரித்திவிராஜ் ஆய்வு செய்தார். இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 2:00 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் இருந்தும், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர் விருதுநகர் அருப்புக்கோட்டையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமென அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், வருவாய்த்துறை, உள்ளாட்சி, போலீஸ் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.