பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசை : முன்னோர்களுக்கு தர்பணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2022 04:09
மயிலாடுதுறை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசை முன்னிட்டும் தங்கள் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடலில் காவிரி கலக்கும் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படும் காவிரி சங்கமத்தில் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி சங்கமத்தில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த மூன்று அமாவாசைகளில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். மஹாளய அமாவாசையான இன்று பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.