செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 9 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.