கூடலுார்: கூடலுார் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள கூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அவல், துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.