பதிவு செய்த நாள்
26
செப்
2022
08:09
பண்ருட்டி,: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். புரட்டாசி மாதத்தையொட்டி, பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாள் நெய்தீப தரிசனத்தில், திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, காலை 6:30 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், காலை 7:30 முதல் 8:30 மணி வரை தோமாலை சேவை, பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.மாலை 5:00 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், 6:00 மணிக்கு தோமாலை சேவை, 6:30 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இரவு 8:30 மணிக்கு பள்ளியறை சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.