திருப்புவனம்: புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.
பழம், எள், சர்க்கரை வழங்கி முன்னோர்களை வழிபட்ட பின் பசுமாடுகளுக்கு அகத்தி கீரை வழங்கிய பின் புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சென்ற நிலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் பலரும் சிரமப்பட்டனர். பக்தர்கள் கூட்டத்தை போலீசார் ஒழுங்குபடுத்தாதால் முதியோர்கள் பலரும் தடுமாறி விழுந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வைகை ஆற்றினுள் கொட்டகை அமைத்து தர்ப்பணம் வழங்கினர். கட்டணம் வசூலித்த தேவஸ்தானம் சுத்தம் செய்ய பணியாளர்களை நியமிக்காததால் கழிவுகள் , குப்பைகளுக்கு நடுவில் பக்தர்கள் திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர். பக்தர்களுக்கு குடிநீர் . கழிப்பிட வசதி இல்லாததால் வெளியூர் பக்தர்கள் சிரமப்பட்டனர்.