பதிவு செய்த நாள்
29
செப்
2022
10:09
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜவுளிக்கடை, பூக்கடை, சின்னக்கடை உட்பட பல இடங்களில் தசரா விழா நடக்கிறது.
இந்தாண்டு விழா, கடந்த 26ல் துவங்கி, 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.தினமும், பல்வேறு விதமான அம்மனுக்கு, மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்பின், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு, சுவாமி தரிசனம் செய்வர்.நேற்று முன்தினம், அண்ணா சாலையில் உள்ள கோவில்களில், பல்வேறு விதமான அம்மன்களுக்கு மலர் அலங்காரத்தில் ஜோடிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்புரிந்தனர். ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, மீனாட்சி அம்பாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.