கீழக்கரை: கீழக்கரை தட்டாந்தோப்பு தெரு முத்துமாரியம்மன் கோயிலில் 70ம் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது.செப்.20ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை நடந்தது. காலையில் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது. மூலவருக்கு 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் ராஜகோபால், செயலாளர் பாண்டி அம்பலம், வேலுச்சாமி, நாகவேல், ஜெயராஜ் மற்றும் மேலக்கொடிக் கால் நாடார் உறவின் முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.