காளஹஸ்தி கோயில் சார்பில் விஜயவாடா கனக துர்க்கைக்கு பட்டு வஸ்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2022 08:10
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் தேவஸ்தானத்தில் இருந்து பட்டு வஸ்திரங்களையும் பூஜை பொருட்களையும் சரன் நவராத்திரியை ஒட்டி விஜயவாடா கனக துர்க்கை அம்மனுக்கு வழங்குவதற்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக ஸ்ரீனிவாசலூ மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு , தேவஸ்தான அதிகாரிகள் விஜயவாடாவில் உள்ள இந்திரகிலாத்ரி மலை மீது வீற்றிருக்கும் கனக துர்க்கை அம்மனுக்கு நவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் பூஜை பொருட்களையும் மற்றும் பட்டு வஸ்திரங்களையும் கோயில் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பாவிடம் வழங்கினார் .இது குறித்து அஞ்சூரு. தாரக சீனிவாசுலு பேசுகையில் கடந்த நான்கு ஆண்டு காலமாக ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானத்தில் இருந்து நவராத்திரி விழா சமயத்தில் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் போல் இவ்வாண்டு கனகதுர்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கப்பட்டது என்றார்.