நகரி: கடந்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் திருப்பதி கோவிலில் அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனிடையே நேற்று இரவு வி.ஐ.பி., தரிசனத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லி 3 மணி நேரத்திற்கு மேல் காத்துகிடந்த பக்தர்கள் பொறுமையிழந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் திருப்தி கோயிலில் சிறிது பதட்டம் நிலவியது. அதேப்போல் பாதயாத்திரையாக நடந்து வரும் பக்தர்கள் இரவு 12மணிக்கு மேல் 3 மணி வரை நடந்து செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் 24 மணிநேரமும் பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இனி 24 மணிநேரமும் அளப்பரி டோல்கேட் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.