ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தாயார் திருவடி சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2022 06:10
ஸ்ரீரங்கம் : நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாளான நேற்று மாலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தாயார் சன்னதியில் திருவடி சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் கோயிலில் நாள்தோறும் மாலையில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு முன்புறம் உள்ள பொன் வேய்ந்த கொலுமண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். வைணவக் கோயில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை சேவித்தல் சிறப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாயகித் தாயார் படிதாண்டாபத்தினி என்ற சிறப்புக் கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்விக்கப்படும். ஆனால் நவராத்திரியின் ஏழாம் திருநாள் மட்டும் இவரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்விக்கப்படும். இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை நேற்று (2-ம்) தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் வசதிக்கென கோயில் நிர்வாகம், காவல்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.