சதுரகிரியில் மலையில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2022 06:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இன்று(அக்.3) முதல் அக்.5 வரை பக்தர்கள் மலையில் தங்க அனுமதி கிடையாது என சிவகாசி சப் கலெக்டர் பிரித்திவிராஜ் உத்தரவிட்டுள்ளார்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஏழூர் சாலியர் சமூகத்தின் சார்பில் நவராத்திரி திருவிழா பல வருடங்களாக கொண்டாடப்படுகிறது. இதில் நவராத்திரி விழாவிஙால் முக்கிய நிகழ்வான அம்பு எய்தல், முளைப்பாரி சுமத்தல் நிகழ்விற்காக கடைசி மூன்று நாட்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் தங்கி ஆனந்தவல்லி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த வருடமும் 2 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் தங்கி விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என சுந்தரபாண்டியம் பேரூராட்சி தலைவர் ராஜம்மாள் சிவகாசி சப் கலெக்டரிடம் கோரிக்கை மனு அரளித்திருந்தார். தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள சதுரகிரி வனப்பகுதியில் பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அக்டோபர் 3 முதல் 5 வரை 2 ஆயிரம் பக்தர்கள் மலையில் இரவு தங்க வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனடிப்படையில் ராஜம்மாள் கோரிக்கைக்கு அனுமதி மறுத்து, சிவகாசி சப் கலெக்டர் பிரித்திவிராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையற அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6:00 மணிக்குள் திரும்பி வரவேண்டும். .அதற்கு மேல் யாரும் மலையில் தங்க அனுமதி இல்லை. மேற்படி உத்தரவினை மீறும் பட்சத்தில் வனத்துறையினால் வன பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.