பதிவு செய்த நாள்
03
அக்
2022
06:10
செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகரில், செப்., 26ல் துவங்கிய தசரா விழா, வரும் 5ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நகரில் உள்ள அண்ணா சாலை, அனுமந்தபுத்தேரி உட்பட பல பகுதிகளில், பல்வேறு வடிவில் அம்மன்கள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆறாம் நாள் விழாவில், பெரிய நத்தம் கைலாசநாதர் கோவிலில், அம்பாள் அனந்தசயன கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார்.ஜவுளிக்கடை வீதி, சரஸ்வதி அம்மன் கோவிலில் முருகர், வள்ளி தெய்வானை; நத்தம் சேப்பாட்டியம்மன் கோவிலில், அன்னபூரணி அம்மன். அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோவிலில் மணப்பாக்கம் கன்னியம்மன், ஆத்துார் முக்தீஸ்வரர் கோவில் கருமாரி அம்மன் ஆகிய அம்மன்கள் எழுந்தருளினர்.