மேலபண்ணைக்குளம் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2022 09:10
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் அய்யனார் கோயில் நல்ல மழைபெய்து விவசாயம் செழிக்க வேண்டி குதிரை எடுப்புவிழா நடைபெறுவது வழக்கம்.இதனை முன்னிட்டு பெருகரணை கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். பெருகரணையில் தயார் செய்யப்பட்ட குதிரைகள், தவளும் பிள்ளைகள் கீழக்குளம் வழியாக கிராமத்திற்கு ஊர்வலமாக தூக்கி வந்தனர். பின்பு கண் திறப்பு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக குதிரைகள் தூக்கி வந்து அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.