பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் மகா சுதர்சன ஹோமம் நடந்தது. காலை, 7:00 மணி முதல், 7:30 வரை விஷ்ணு சகஸ்ரநாமம், 7:30 மணி முதல், 8:30 மணி வரை கோமாதா பூஜை, தொடர்ந்து,10:30 மணி வரை சங்கல்பம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு அபிஷேகம், 12:00 மணிக்கு தீபாராதனை, மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீஷ் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.