பதிவு செய்த நாள்
22
ஆக
2012
11:08
மதுரை: வனத்துறை தடையால், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில், ஆக.,26ல் நடக்கும் நரியை பரியாக்கிய லீலைக்கு, உயிருள்ள நரிக்கு பதில் மரபொம்மை பயன்படுத்தப்படுகிறது. இத்திருவிழாவில், தினமும் சுவாமி சுந்தரேஸ்வரரின் லீலை நடக்கிறது. ஆக.,26ல், நரியை பரியாக்கிய லீலை நடக்கிறது. இதற்காக மதுரை அனுப்பானடியில் இருந்து ராமசுப்பிரமணியன் என்பவரின் குடும்பத்தினர், உயிருள்ள நரியை கோயிலுக்கு எடுத்து வருவர். கடந்தாண்டு கடைசி நேரத்தில் இதற்கு வனத்துறை தடைவிதித்தது. லீலை ஐதீக முறைபடி நடக்க, ராமசுப்பிரமணியன் குடும்பத்தினர் மரத்திலான நரி பொம்மையை உடனடியாக தயார் செய்து, ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். இந்தாண்டும் வனத்துறையின் தடை நீடிப்பதால், அதே நரிபொம்மையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.