சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா: மாவிளக்கு ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2022 10:10
அவிநாசி: சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அவிநாசி அடுத்த தெக்கலூரில் எழுந்தருளியுள்ள சேற்று மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த வாரம் செவ்வாய்யன்று தொடங்கியது. அதனைத் முன்னிட்டு கம்பம் நடும் விழா நடைபெற்று, காலையிலும் மாலையிலும் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வு நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியில் தெக்கலூர், ஏரிப்பாளையம், வெள்ளாண்டிபாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பச்சரிசி மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைக்க நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து மாலையில் கம்பம் பிடுங்கி கங்கையில் விடும் நிகழ்ச்சியோடு விழா பூர்த்தி அடைந்தது. பூச்சாட்டு விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஊஞ்சப்பாளையம் காவடி குழுவினரின் காவடியாட்டதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.