வாடிப்பட்டி: சமயநல்லூர் அருகே தேனுரர் சுந்தரவள்ளி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா அக்.,4ல் காப்பு கட்டத்தலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தனர், மாலை அம்மன் வீதி உலாவும், இரவு தீச்சட்டி, பொங்கல் வைத்தல், உருண்டு குடுத்தல் நடந்தது. நேற்று காலை முளைப்பாரி ஊர்வலத்துடன் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிகளில் எழுந்தருளினார். பக்தர்கள் சேத்தாண்டி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.