பதிவு செய்த நாள்
13
அக்
2022
08:10
துாத்துக்குடி: துாத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது . இதனை ஒட்டி நேற்று காலை மகா கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சரியாக பத்தரைமணிக்கு கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகளை தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் செய்தார் . தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது.
கொடியேற்றம் விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கவுன்சிலர் சுரேஷ்குமார், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா, வைகுண்டபதி பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, தேரோட்டபவனி விழா குழு கார்த்தி, சோமநாதன், பவுர்ணமி கமிட்டி நெல்லையப்பன், சண்முகசுந்தர பட்டர், கோயில் ஆய்வாளர் ருக்மணி, கணக்கர் சுப்பையா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு ஏழு மணிக்கு பித்தளை சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நடந்தது. திருவிழாவைஒட்டி ஒவ்வொரு நாளும் பாகம்பிரியாள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. இன்று கிளி வாகனத்திலும், நாளை அன்னபட்சி வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. காலை பத்து மணிக்கு சுந்தரபாண்டிய விநாயகர் ஆலயத்தில் பாகம்பிரியாள் அம்மனுக்கு குடமுழுக்கு தீ ர்த்தவாரி, தீபாராதனை நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு பாகம்பிரியாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூம்பல்லக்கில் திருவீதி உலா வருதல் நடக்கிறது. 22ம் தேதி மாலை சங்கரராமேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பாகம்பிரியாள் அம்மனுக்கு காட்சி தருதல், மாலை மாற்றுதல் நடக்கிறது. இரவு எட்டரைமணிக் கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சுவாமி, அம்மன் பட்டினப்பிரவேசம் நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை முதல் மதியம் வரைபாகம்பிரியாள், சங்கரராமேஸ்வரர் குடமுழுக்கு தீபாராதனை, இரவு எட்டு மணிக்கு அம்மன் , சுவாமி ஊஞ்சல் தீபாராதனை, இரவு 9 மணிக்கு சண்டிகேஸ்வரர், ஸ்ரீ பைரவர் பூஜையுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் , தேரோட்ட பவனி விழா குழுவினர், மண்டகபடி தாரர்கள் செய்து வருகின்றனர். விழாவை ஒட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.