கொட்டாம்பட்டி: மங்களாம்பட்டி ஆதினமிளகி அய்யனார் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. குதிரைபொட்டலில் இருந்து கிராமத்து சார்பில் செய்யப்பட்ட புரவிகள் மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் புரவிகளை கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. இத் திருவிழாவில் மங்களாம்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.