திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி திருவிழா அக்.25ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2022 07:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்.25ல் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அக். 25 காலை 7:00 மணிக்கு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் , வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது அதனைத் தொடர்ந்து நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டப்படும். காலை 8:45 மணிக்கு மே ல் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்.29ல் வேல் வாங்குதல், அக். 30ல் சூரசம்ஹாரம், அக். 31 காலையில் சட்டதேரோ ட்டம், மாலையில் பாவாடை நைவே தனத ரிசனம் நடை பெறும். திருவிழா நாட்களில் தினமும் இருவேளை யாகசாலை பூஜைகளும், சண்முகா அர்ச்சனையும் நடை பெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறையை வலம் வந்து அருள் பாலிப்பார்.