ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2022 07:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் நேற்று முதல் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் திருவாய்மொழி சேவாகாலம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்தனர். அக. 22 வரை 7 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.