மானாமதுரை வீர அழகர் கோயிலில் புரட்டாசி லட்சார்ச்சனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2022 07:10
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் நடைபெற்ற புரட்டாசி மஹா லட்சார்ச்சனை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் கல்வி, செல்வம்,வீரம்,மக்கள்பேறு உட்பட பதினாறு வகையான செல்வங்கள் பெற்றிட வேண்டி நடைபெற்ற புரட்டாசி மாத மகா லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை உற்சவருக்கும்,மூலவருக்கும் 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான அர்ச்சகர்கள் லட்சார்ச்சனை விழாவில் பங்கேற்று ஹோமங்கள் வளர்க்கப்பட்டு காலை முதல் மாலை வரை சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்தனர். இதனைத் தொடர்ந்து 16 வகையான செல்வங்கள் கிடைக்க வேண்டி பக்தர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்யப்பட்டது.இந்த விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். லட்சார்ச்சனை முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் கோபி மாதவன் மற்றும் மாருதி அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.