பதிவு செய்த நாள்
19
அக்
2022
04:10
வால்பாறை: ஐப்பசி முதல் நாளான நேற்று, வால்பாறையில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி சன்னதியில், ஐப்பசி முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, பால், நெய், இளநீர், சந்தனம், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஐயப்ப சுவாமியை தரிசித்தனர். இதேபோல், வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலிலும், நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது.