வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2022 07:10
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோவிலில் சீரடி சாய்பாபாவின் பக்தர் மணி பாபாவின் 14ம் ஆண்டு நினைவு பூஜை தின நடந்தது. பூஜையையொட்டி சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, பின் அலங்காரம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மணி பாபாவின் நினைவு தின சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல், நத்தம், கோபால்பட்டி உள்ளிட்ட பகுதி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.