ராமேஸ்வரத்தில் கனமழை : கோயில்களை மழை நீர் சூழ்ந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2022 07:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயில் மற்றும் உபகோயில்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ராமேஸ்வரம் 10 செ.மீ., தங்கச்சிமடம் 5 செ.மீ., பாம்பன் 6 செ.மீ., என மழை கொட்டி தீர்த்தது. இதனால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு, மார்க்கெட் தெருவில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி கிடந்து, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து சில மணி நேரத்திற்கு பின் கடலுக்குள் சென்றது. மேலும் ராமேஸ்வரம் திருக்கோயில் சுவாமி சன்னதி சுற்றி நேற்று நள்ளிரவு 3 மணிக்கு 2 அடி உயரத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனை கோயில் ஊழியர்கள் மோட்டார் மூலம் நேற்று காலை 8 மணி வரை வெளியேற்றியனர். இதனால் பக்தர்கள் மழை நீரில் சிரமத்துடன் சென்று பெரிதும் அவதிப்பட்டினர். மேலும் திருக்கோவில் உபகோயிலான லட்சுமணர் தீர்த்த கோயிலல சுற்றி தண்ணீர் தேங்கி கிடக்கிறது.