வவ்வால்களுக்காக தீபாவளியில் பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2022 07:10
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, வவ்வால்களுக்காக தீபாவளியிலும் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் உள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பல்லேனஹள்ளியில், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பழமையான ஆலமரம் மற்றும் புளியமரத்தில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால்கள் வசிக்கின்றன. அவற்றை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதி அங்கேயே கோவில் ஒன்றை எழுப்பி, அங்கு வவ்வால் முனியப்பன் என சிலை வைத்து, வவ்வால்களை வழிப்பட்டு வருகின்றனர். பட்டாசு வெடிச்சத்தம் கேட்டால், வவ்வால்கள் இங்கிருந்து பறந்து விடும் என்பதால், தீபாவளியன்றும் கிராம மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல், வவ்வால்களை பாதுகாத்து வருகின்றனர். அதேபோல், பறவைக்காய்ச்சல் மற்றும் வவ்வால்களின் எச்சத்தின் மூலம் கொரோனா பரவியதாக கூறப்பட்ட நிலையிலும், அப்பகுதி மக்கள் வவ்வால்களை தெய்வமாக வணங்கி வந்தனர்.