பதிவு செய்த நாள்
26
அக்
2022
05:10
சுல்தான்பேட்டை: செஞ்சேரிமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவ விழா மற்றும் காப்பு கட்டுதல் "யாகசாலை பூஜைகள்" நேற்று 25.10.2022 (செவ்வாய்க் கிழமை) தொடங்கி 29.10.2022 (சனிக்கிழமை ) வரை நடைபெறுகிறது. இவை தவிர தினமும் காலை 7 : 30 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவக்கப்படுகிறது. காலை 10 : 30 மணிக்கு "சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் , சத்ருசம்ஹார பூஜை மற்றும் மஹா தீபாராதனை "கந்த புராணபாராயணம் நடைபெறுகிறது.
கோவிலில் நடைபெறும் பூஜைகள் :-
ஐப்பசி மாதம் 13 ஆம் நாள் 30 .10.2022 (ஞாயிற்றுக் கிழமை) ( கந்த சஷ்டி சூரசம்ஹார திருநாள் ) அன்று நடைபெறும் பூஜைகள்
காலை 05 : 30 மணிக்கு விளாப்பூஜை அபிஷேகம் , பூஜை தீபாராதனை , (யாக சாலை பூஜைகள் )
காலை 6 : 30 மணிக்கு காலசந்தி அபிஷேகம் , "பூஜை தீபாராதனை"
காலை 8 : 30 மணிக்கு பெருகால பூஜை அபிஷேகம் , பூஜை தீபாராதனை
காலை 10 : 30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் , "சத்ரு சம்ஹார பூஜை" , மஹா தீபாராதனை
மதியம் 2 :00 மணிக்கு "சாயரட்சை அபிஷேகம் பூஜை"
மந்திரகிரி முத்துக்குமார சுவாமி வீர நடனக் காட்சி" பெரியநாயகி அம்மன் சன்னதியில் சக்திவேல் வாங்குதல் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருதல்
மாலை 4 : 30 மணிக்கு மலையைச் சுற்றி சூரசம்ஹாரம் , வெற்றி மாலை
மாலை 6 : 00 மணிக்கு சுவாமி மலைக்கு எழுந்தருதல். மாலை 6 : 30 மணிக்கு சந்தாபிஷேகம் , 108லிட்டர் பால் , 108 லிட்டர் இளநீர் , 108 லிட்டர் பன்னீர் , அபிஷேகம் , புஷ்ப அலங்காரம் , சேவை , திருப்புகழ் இசை வழிபாடு , மஹா தீபாராதனை
ஐப்பசி மாதம் 14 ஆம் நாள் 31.10.2022 (திங்கட் கிழமை) "திருக்கல்யாண வைபவ விழா
காலை 08 : 30 மணியளவில் யாகசாலை பூஜைகள் நிறைவு.
காலை 09 : 30 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகம் , யாக கலசம் அபிஷேகம் , காப்பு அவிழ்த்தல் , திருக்கல்யாண வைவங்கள் மற்றும் பகல் 12 : 30 மணிக்குள் திருமாங்கல்யதாரணம் , மொய் பணம் , பாத காணிக்கை செலுத்துதல் , மஹா தீபாராதனை நடைபெறுகிறது.இதை தொடர்ந்து திருக்கல்யாண "அன்னதான விருந்தும்" நடைபெறுகிறது என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.