திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2022 08:10
அவிநாசி: திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு காட்டுதலுடன் தொடங்கியது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி விழாவை ஒட்டி நேற்று காலை கோவிலில் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டு. சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காப்புக் கட்டிக் கொண்டனர். இதனையடுத்து நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக அன்னையிடம் சக்திவேல் வாங்கி, சண்முகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, ஞாயிறன்று நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து,திங்களன்று சண்முகநாதர் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் மொய் பணம் எழுதுதல், பாத காணிக்கையடுத்து, வெள்ளையானை வாகனத்தில் வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமண்ய சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்சிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளது.