பரமக்குடி: பரமக்குடியில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அக். 30 அன்று சூரசம்ஹார லீலை நடக்கிறது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்., 25 இரவு 8:00 மணிக்கு சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனைக்கு பின் பிரசாரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தினமும் மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து இரவு 8:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும். இக்கோயிலில் அக். 30 மாலை 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, மயில் வாகனத்தில் சக்தி வேலுடன் எழுந்தருளி வீதி வலம் வருவார். அன்று இரவு 7:00 மணிக்கு கோயில் முன்பு வைகை ஆற்றின் கரையில் சூரசம்ஹார லீலை நடக்க உள்ளது. மறுநாள் காலை 9:45 மணி முதல் 10:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு வீதி வலம் நடைபெறும்.
*இதேபோல் பரமக்குடி 5 முனை ரோடு மற்றும் பால்பண்ணை எதிரில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது.