திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சி அம்மன் கோயிலுக்கு பெண்கள் மதுக்குடம், முளைப்பாரி எடுத்தனர். மது எடுப்பை முன்னிட்டு 9 நாட்களுக்கு முன்பாக கிராமத்தினர் காப்புக்கட்டி விரதம் துவக்கினர். கண்டரமாணிக்கம் வடக்குத்தெரு பெண்கள் முளைப்பாரி மற்றும் மதுக்குடங்கள் வைத்து கும்மியடித்தனர். பின்னர் ஊர்வலமாக கடைவீதியில் உள்ள சவுக்கையில் கும்மியடிக்கு, குலவையிட்டு வைத்து அம்மனை வணங்கினர். தொடர்ந்து தெற்குப்பட்டு கிராமப் பெண்களும் முளைப்பாரி, மதுக்குடம் எடுத்து வர கிராமத்தினர். அனைவரும் அம்மனுக்குச் செலுத்தினர். அடுத்து மூலவர் அம்மக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பாரியை எடுத்து அம்மன் குளத்தில் கரைத்தனர்.