பதிவு செய்த நாள்
27
அக்
2022
01:10
வடமதுரை: வடமதுரை மொட்டணம்பட்டியில் ஸ்ரீ பெருமாள், வீரபாப்பம்மாள், வீரமல்லம்மாள் கோயில் கும்பாபிஷேகம் கடந்த செப்.ல் நடந்தது. இதன் தொடர்ச்சியாக 48 வது நாள் மண்டல பூஜை நடந்தது. பால், தயிர், தேன், இளநீர் உள்பட ஏழு வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் ஜவஹர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். விழா ஏற்பாட்டினை மொட்டணம்பட்டி, போஜனம்பட்டி, சிக்காளிபட்டி, சிக்குபோலகவுண்டன்பட்டி, ஓடைப்பட்டி, சுருளிப்பட்டி, மல்லிங்காபுரம், எஸ்.கே.புதூர், பண்ணைபுரம், திண்டுக்கல், ஸ்ரீரங்கம், கெச்சானிபட்டி, தென்னம்பட்டி, ஏ.குரும்பபட்டி. வேலாயுதம்பாளையம் ஊர்களில் வசிக்கும் காமுகுல ஒக்கலிக (காப்பு) உழுவினார் குல பங்காளிகள் செய்திருந்தனர்.