பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
திருப்பரங்குன்றம்: மதுரையில் இன்று(ஆக.,27) நடக்கும் புட்டுத் திருவிழாவில் கலந்து கொள்ள, பாண்டிய ராஜாவாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை யுடன் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று புறப்பட்டார். தங்க பல்லக்கில் சுவாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றார். அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு நரியை பரியாக்கிய லீலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மதுரை சுவாமிகளுடன் பங்கேற்றனர்.இன்று புட்டுக்கு மண் சுமந்த லீலையிலும், அடுத்ததாக விறகு விற்ற லீலையிலும் சுப்பிரமணிய சுவாமி கலந்து கொள்கிறார். ஆக.,30ல், ஆடிவீதி உலா நிகழ்ச்சி முடிந்து, 16கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விடைபெறும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆக.,31ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பூ பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர்.