வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி உற்ஸவ விழா அக்.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் அக்.,25ல் அக்னிச்சட்டி, 26ல் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்தும்,கருப்பண சுவாமி கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். நேற்று மாலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, நகர்வலம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் இரவு கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.