பதிவு செய்த நாள்
30
அக்
2022
12:10
பெரியகுளம்: சூரபத்மனை வதம் செய்வதற்கு சிவசுப்பிரமணியருக்கு சக்திவேல் கொடுத்து ஞானாம்பிகை வழியனுப்பும் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. நேற்று 5ஆம் நாள் விழாவில் ஏராளமான பக்தர்கள் பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானையை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சக்திவேல் கொடுக்கும் விழா: இன்று 6ம் நாள் (அக்.30) சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. இதற்காக நேற்று (அக். 29ல்) காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ஞானாம்பிகை அம்மன், சிவசுப்பிரமணியருக்கு சக்திவேல் கொடுத்து, சூரபத்மனை வதம் செய்வதற்கு வழி அனுப்பும் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை அக். 31ல் கோயில்களில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.