பதிவு செய்த நாள்
01
நவ
2022
11:11
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா அக்., 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளினார். நேற்று முன்தினம், பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம் நடந்தது. இதையடுத்து நேற்று இரவு 7:00 மணிக்கு கந்தசுவாமி – தெ ய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்ததை தொடர்ந்து, சஷ்டிலவிழா நிறைவடைந்தது. மறைமலை நகர் என்.ஹெ ச்., – 2 பகுதியில் பழமையான செல்வமுத்து குமாரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், கந்தசஷ்டியை முன்னிட்டு ஆறு நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பிரகாரத்தில் உள்ள கணபதி, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. உற்சவத்தின் கடைசி நாளான நேற்று, உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து, திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி –தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, முருகனை தரிசித்தனர். சிங்கப்பெருமாள் கோவில், திருக்கச்சூர், திருத்தேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகனை வேண்டி ‘அரோகரா...’கோஷமிட்டனர்.