பதிவு செய்த நாள்
01
நவ
2022
12:11
செஞ்சி: செஞ்சி பகுதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டியை முன்னட்டு சூரசமஹார விழா நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவில் 42ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு சுந்தரவிநாயகர், முருகப்பெருமனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருமுருகன் தோற்றம் நிகழ்ச்சியும, தந்தைக்கு உபதேசம், தாருகன் வதை, சிங்கமுகம் வதை, வீரபாகு துாது நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. 29ம் தேதி வேல் வங்குதலும், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் கடந்த 25ம் தேதி துவங்கி கந்த சஷ்டி விழா நடந்து வந்தது. தினமும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். திருமுருகன், தோற்றம், தந்தைக்கு உபதேசம், தாருகன் வதம், சிங்கமுகன் வதம், வீரபாகு துாது, வேல் வாங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் விழா நடந்தது. நவ வீரர்கள் ஊர்வலம், தபசு மரம் ஏறுதல் மற்றும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் 25ம் தேதி விழா துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றமும், தொடர்ந்து தந்தைக்கு உபதேசம், தாருகன் வதம், சிங்கமுகன் வதம், வீரபாகு துாது, வேல் வாங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பென்னகர் அடுத்த மேல்தாங்கல் திருவத்திமலை மலேஷிய முருகன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். இரவு சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.