பதிவு செய்த நாள்
02
நவ
2022
11:11
கடையநல்லுார்: கடையநல்லுார் கரடி மாடசாமி கோயில் ஐப்பசி பெருங்கொடை விழாவை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
விஷ்ணு பகவானின் 9 அவதாரங்களில் வராஹ அவதாரத்துடன் பிரசித்தி பெற்ற கோயிலாக கடையநல்லூர் கரடிமாடசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காக்கும் விநாயகர், லட்சுமி வராஹமூர்த்தி, அபயஹஸ்த ஆஞ்சநேயர், துர்காகாளி, பரமேஸ்வரர், பரமேஸ்வரி, முத்தாலம்மன், சப்தமாதாக்கள், கருடாழ்வார், ஸ்ரீராம்கரடி உள்ளிட்ட சுவாமிகளும் இடம் பெற்றுள்ளனர். கடையநல்லூர் கரடிமாடசாமி கோயில் ஐப்பசி கடந்த 25ம்தேதி காப்பு கட்டும் வைபவத்துடன் துவங்கியது. விழாவில் மஞ்சனை அலங்காரம், காய்கனி அலங்காரம், அன்னாபிஷேகம், லட்டு அலங்காரம், திருவிளக்கு பூஜை, பழ அலங்காரம் மற்றும் பல்வேறு வைபவங்கள் நடந்தது. இந்நிலையில் 31ம்தேதி பால்குடம், புஷ்பாஞ்சலி, நடந்தது. விழாவில் சிறப்பு பெற்ற தீர்த்தக்குடம் ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.