சபரிமலை பக்தர்களுக்கு உதவ மொபைல்ஆப் : கேரள அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2022 05:11
சபரிமலை, சபரிமலை பக்தர்களுக்கு உதவுவதற்காக மொபைல்ஆப் உருவாக்கப்படும் என்று கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சதீந்திரன் கூறினார். மண்டல – மகரவிளக்கு கால சீசனையொட்டி பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பம்பையில் ஆய்வு செய்த பின்னர் அமைசசர் நிருபர்களிடம் கூறியதாவது: பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகள், குடிநீர், காட்டு பாதைகளில் பாதுகாப்பான இடங்கள், காட்டு விலங்குகள் நடமாடும் இடம், உதவி மையங்கள் செயல்படும் இடங்கள் போன்றவற்றை உட்படுத்தி மொபைல்ஆப் உருவாக்கப்படும். இந்த ஆப் மூலம் பக்தர்கள் அதிகாரிகளையும் தொடர்பு கொள்ள முடியும். மண்டல மகரவிளக்கு காலத்தில் கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வன ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். முடிந்த அளவு எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். ளாகா முதல் பம்பை வரை 24 மணி நேரமும் ரோந்து வரும் வகையில் அதிவிரைவு பறக்கும் படை அமைக்கப்படும். அவசர சிகிச்சை மையங்கள், இயற்கை பொருட்களின் ஸ்டால்கள் நிறுவப்படும். காட்டு பாதைகளில் தானியங்கி சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளில் நடமாட்டம் கண்காணிக்கப்படும். பம்பையிலும், சன்னிதானத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும்.. தேவசம் :அதிகாரிகளுடன் இணைந்து வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்து அபாயகரமான மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்/. சுகாதரத்துறை அமைச்சர் வீணாஜார்ஜ் நேற்று பம்பையில் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.