பதிவு செய்த நாள்
03
நவ
2022
05:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நான்காயிர திவ்ய பிரபந்தத்தை துவக்கி வைத்த முதல் ஆழ்வார்கள் திருநட்சத்திர விழா நடந்தது.
ஆழ்வார்களில் முதன் முதலில் அவதரித்த பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளி நான்காயிர திவ்ய பிரம்மந்தத்தை தமிழில் பாசுரங்களாக பாடினர். அவர்களின் திரு நட்சத்திர தினமான இன்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு நித்திய பூசை, 8:30 மணிக்கு பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் புறப்பாடாகி பெருமாள், தாயார், ஆண்டாள், வேணுகோபாலன் சன்னதியில் எழுந்தொளி மங்களாசாசனம் நடந்தது. பாண்டிய மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமயத்தை தேகளீச பெருமாள் எழுந்தருள உடன் ஆழ்வார்களுக்கும் விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு நாலாயிர பிரபந்த பாசுரங்கள் சேவா காலம் துவங்கி, சாற்றுமரை, பிரசாத விநியோகம், சுவாமிகள் ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.