பதிவு செய்த நாள்
04
நவ
2022
10:11
பேரூர்: பேரூரில், ராஜராஜ சோழனின், 1,037வது சதய விழா வெகு சிறப்பாக நடந்தது.
சோழப்பேரரசில், மிக முக்கியமானவராகவும், வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த மன்னருமான, ராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சை பெரிய கோவிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். திருவாவடுதுறை ஆதீனத்தின் பேரூர் கிளையில், கடந்த, 2019ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜராஜ சோழனின் 1,037 வது சதய விழா, பேரூர் திருவாவடுதுறை கிளை மடத்தில், நான்காம் ஆண்டாக நேற்று நடந்தது. இதில், மாலை, 4:00 மணிக்கு, ராஜராஜ சோழன் திருமேனிக்கு, 16 வகையான திரவியங்களால் திருமஞ்சன வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜராஜ சோழன் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது. அதன்பின், மாலை, 7:00 மணிக்கு, பேரொளி வழிபாடும், அன்னம் பாலிப்பும் நடந்தது. இதில், திருவாவடுதுறை ஆதீன பேரூர் கிளை மடத்தின் மேலாளர் பாஸ்கர சேகரன், சதய விழா குழு சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.