பழமையான கோயில் வளாகத்தில் தேங்கும் மழை, கழிவு நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2022 10:11
வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயில் ஹிந்து சமய அறநிலையத்துறை பொறுப்பில், பரம்பரை அறங்காவலர் நிர்வாகத்தில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் குலசேகரபாண்டிய மன்னர் குழந்தை பருவத்தில் வழிபாடு செய்துள்ளார். கோயிலின் தெப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மேடானது,ஓடை ரோடானது. இதனால் கழிவுநீர் கால்வாய்களில் செல்லும் மழை நீர் தாழ்வான கோயிலுக்குள் புகுந்து 3 அடிக்கும் மேல் நாள் கணக்கில் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மோட்டார்கள் மூலம் ஆயிரக்கணக்கில் செலவு செய்து நீரை வெளியேற்றுவதும், இரவு மீண்டும் மழை நீர் கருவறை வரை புகுவதும் தொடர்கிறது. கோயில் முழுவதும் ஒழுகுகிறது, வளாகத்தில் நீர் ஊற்றெடுக்கிறது.சுண்ணாம்பு காரை கட்டடம் வலுவிழந்து வருகிறது. கோயிலை புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். பரம்பரை அறங்காவலர் கண்ணன் : கும்பாபிஷேகம் நடந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 8 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைத்து வருகுகிறேன். அறநிலையத்துறை அனுமதி வழங்கினால் கிராம மரியாதைக்காரர்கள் மூலம் பணிகளை துவங்குவோம் என்றார்.