காரமடை அரங்கநாதர் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2022 05:11
காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் ஐப்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.