திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் கருட கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2022 08:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு கருட கொடியேற்றம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் துலா உற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறையில் காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் முக்கிய உற்சவமான துலா உற்சவம் அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில் பரிமள ரங்கநாதர் கோவிலில் இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பட்டாச்சாரியார்கள் கருடக்கொடியை ஏற்றினர். உற்சவத்தின் சிகர நிகழ்வுகளான திருக்கல்யாணம் வருகிற 15-ஆம் தேதியும், 16-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.